முக்கிய வழக்குகளில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தலையிடுவதாக புகார்

முக்கிய வழக்குகளில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தலையிடுவதாக சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா அளித்துள்ள புகார், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் முக்கிய விசாரணை அமைப்பான சிபிஐயில் தற்போது அதிகார மோதல்கள் வெடித்துள்ளது. சிறப்பு இயக்குநராக இருக்கும் ராகேஷ் அஸ்தானா, மல்லையாவின் முறைகேடு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கு, லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய ரயில்வே முறைகேடு ஆகியவை குறித்து விசாரித்து வருகிறார். இதில், லாலு தொடர்பான வழக்கில் விசாரணையை இயக்குநர் அலோக் வர்மா நிறுத்தியதாக அஸ்தானா  குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து விசாரிக்க மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.  இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விவரங்களைக் கேட்டு சிபிஐ-க்கு மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் கடிதம் எழுதியது.  இந்நிலையில்,  தன் மீதான குற்றச்சாட்டுகளை அலோக் வர்மா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இயக்குநருக்கும், சிறப்பு இயக்குநருக்கும் இடையே ஓராண்டாக மோதல் போக்கு நீடித்து வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts