முக்கொம்பு அணை உடைந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் – வைகோ

முக்கொம்பு அணை உடைந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

          அரியலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மணல் கொள்ளை எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை முக்கொம்பு அணை உணர்த்தியுள்ளதாக தெரிவித்தார். மராமத்து பணிகளில் தமிழக அரசின் செயல் குதிரை ஓடிய பின் லாயத்தை பூட்டுவது போல் உள்ளதாகவும், அவர் தெரிவித்தார். மராமத்து பணிகளில் ஊழல் நடந்துள்ளது என்றும், வெள்ளை அறிக்கை கேட்பது தவறில்லை என்றும் வைகோ தெரிவித்தார்.

Related Posts