முதன்முறையாக தயாரிக்கப்பட்ட தனுஷ் பீரங்கி: இந்திய ராணுவத்தில் இணைப்பு

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 85 சதவீத பாகங்கள் இடம் பெற்றுள்ள தனுஷ் பீரங்கி, இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. 38 கிலோ மீட்டர் தூரம் வரை துல்லியமாக தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட இந்த பீரங்கியின் விலை 14 கோடியே 50 லட்சம் ரூபாயாகும்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போபர்ஸ் பீரங்கியை விட கூடுதலாக 11 கிலோ மீட்டர் தூரம் தாக்குதல் நடத்தும் திறன் படைத்தது.

பல இடங்களில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து, இன்று இந்திய ராணுவத்திடம் தனுஷ் பீரங்கி ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகல் மற்றும் இரவில் தாக்குதல் நடத்தும் தொழில்நுட்பம் கொண்ட தனுஷ் பீரங்கி இணைக்கப்படுவதால் இந்திய ராணுவத்தின் பலம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts