முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மனக்குள விநாயகர் கோவிலில், சபாநாயகர் வைத்திலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பருமழையை எதிர்கொள்வதற்கு அனைத்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் 24 மணி நேர இலவச கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ரெட் அலர்ட் எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் பேரிடர் மேலாண்மை குழு வரவழைக்கப்படும் எனவும் அவர் கூறினார். சர்க்கார் படவிழாவில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து என நாராயணசாமி தெரிவித்தார்

Related Posts