முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தால் தமிழகத்திற்கு முதலீடா? அல்லது அவருக்கு முதலீடா?

முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தால் தமிழகத்திற்கு முதலீடா? அல்லது அவருக்கு முதலீடா? என தெரியவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவதே திமுகவின் நோக்கம் என்று தெரிவித்தார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் இருந்து பின்வாங்க மாட்டோம் என அவர் உறுதிபட கூறினார்.

சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தவறு என டெல்லியில் போராடவில்லை என்றும்  கையாண்ட விதம் தவறு, முறையாக அமல்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டி போராடினோம் என்றும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தால் தமிழகத்திற்கு முதலீடா? அல்லது அவருக்கு முதலீடா? என தெரியவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் வினவினார்.

Related Posts