முதலமைச்சர் – ஆய்வுக் கூட்டம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் குடிமை பணிகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில்  ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து கர்நாடகா அணைகளிலிருந்து காவேரியில் திறந்துவிடப்பட்ட அதிகபட்ச நீர் காரணமாகடெல்டா மாவட்டங்களில் கரையேரா பகுதிகளில் உள்ள  வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,சென்னை, தலைமை செயலகத்தில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் குடிமை பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Related Posts