முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

சென்னை : ஜூன்-27

தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் கட்டப்படும் என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, தோப்பூரில் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் மதுரை தோப்பூரில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts