முதலமைச்சர் பழனிசாமி அமீரக இந்திய வர்த்தக பிரமுகர்கள் சந்திப்பு

துபாய் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமீரகத்தில் உள்ள இந்திய வர்த்தக பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.

இங்கிலாந்து, அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துபாய் சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாய் நகரில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிட்ட பின்னர் அமீரகத்தில் உள்ள இந்திய வர்த்தக பிரமுகர்களை அவர் சந்தித்து பேசுகிறார். தமிழகத்துக்கு முதலீட்டை ஈர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில், தமிழக அமைச்சர்கள், இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.தொடர்ந்து முக்கிய தொழில் அதிபர்களை முதலமைச்சர் நேரடியாக சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பை தொடர்ந்து பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இதற்காக சென்னை நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் துபாயில் முகாமிட்டுள்ளனர். துபாயில் இருந்து நாளை அதிகாலை 2.40 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார்.

Related Posts