முதலீட்டாளர் உச்சி மாநாடு 2018

 இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

      உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் 2 நாள் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் நடத்துவதற்கான நடைமுறைகள் எளிமை ஆக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறினார். நாட்டில் வரி கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், திவால் சட்டத்தின் மூலம் நாட்டில் தொழில் செய்வது எளிமையாகி உள்ளதாகவும் கூறினார். வங்கி அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது எனவும், ஆற்றல், கொள்கை, செயல் திறன் ஆகியவையே வளர்ச்சியின் தாரக மந்திரம் எனவும் அவர் தெரிவித்தார். முதலீட்டாளர் மாநாட்டில் இதன்மூலம் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது.

Related Posts