முதலை வயிற்றிலிருந்து மனித அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்  உலோக தகடு கண்டெடுப்பு

ஆஸ்திரேலியாவில் இறந்த முதலை வயிற்றிலிருந்து மனித அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்  உலோக தகடுகண் டெடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அருகே கூவாங்கோ என்ற இடத்திலுள்ள, ஜான் லீவர் என்பவருக்கு சொந்தமான முதலைபண்ணையில் வயது முதிர்ந்த முதலை ஒன்று உயிரிழந்தது. சுமார் 15 அடி நீளமும் ஆயிரத்து 500 பவுண்ட் எடையும் கொண்ட அந்தமுதலையை உடற்கூராய்வு செய்ததில், சில விநோத பொருட்கள் கிடைத்துள்ளன.

சில வெள்ளி நாணயங்கள் மற்றும் கூழாங்கற்களுடன் எலும்புமுறிவின் போது மனித உடம்பில் வைத்துக்கட்டப்படும் உலோகத்தகடும், 6திருகுகளும் கிடைத்துள்ளன.

முதலைகளின் வயிற்றிலிருந்து இதுபோன்ற பொருட்கள் கிடைப்பது வழக்கமென்ற போதிலும், உலோகத்தகடு கிடைத்திருப்பதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts