முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் காலை 9 மணி நிலவரப்படி 11சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 19–ந் தேதி வரை ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசலபிரதேசம், சிக்கிம்,ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில்  20மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்திவையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆந்திராவில் வாக்கு சாவடிகளில்  50க்கும்  மேற்பட்ட  மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானது.லட்சத்தீவில் காலை 9 மணி நிலவரப்படி 9புள்ளி.83  சதவீத வாக்குப் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானாவில்காலை 9 மணி நிலவரப்படி 10புள்ளி 6 சதவீதமும், அந்தமானில் 5புள்ளி 83 சதவீதமும், அசாமில் 10 புள்ளி.2 சதவீதமும், அருணாசலபிரதேசத்தில் 13புள்ளி 3 சதவீதமும் வாக்குப்பதிவாகி  உள்ளது.உத்தரகண்டில் 13.34 சதவீதம்,  பீகார் – 5சதவீதம் மேகாலயா  20.41 சதவீதம்,  நாகாலாந்து -21சதவீதம் ,மணிப்பூர் – 16புள்ளி09 சதவீதம்   மிசோரம் – 17புள்ளி 46 சதவீதம்  வாக்குப்பதிவாகிஉள்ளது.  மேற்கு வங்காளத்தில் 18புள்ளி12 சதவீதம், மிசோரம்  17புள்ளி5 சதவீதம், சத்தீஷ்கர்10புள்ளி 2 சதவீதம், மணிப்பூர் 15புள்ளி 5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

Related Posts