முதல்கட்ட மக்களவை தேர்தலில் 69.43 சதவீத வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் 

18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. 91 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

லட்சத்தீவில் அதிகபட்சமாக 84.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல்கட்டத்தில் குறைந்தபட்சமாக பீகாரில் 53.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 91 தொகுதிகளிலும் சராசரியாக பார்க்கும்போது 69.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இது இறுதியான புள்ளிவிவரம் இல்லை என்றும், மிகச்சிறிய அளவில் மாறுதல்களுக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டின் முதல்கட்ட தேர்தலோடு ஒப்பிடும்போது, நடப்பு தேர்தலின் முதல்கட்டத்தில் ஒரு சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts