முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு  இன்று 65-வது பிறந்தநாளாகும்.. தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பரங்குன்றம் சென்றிருந்த அவர் இன்று காலையில் மதுரையில் தங்கி இருந்தார். அப்போது தனது பிறந்த நாளை கொண்டாடாமல் எளிமை காட்டி வழக்கம் போல் பிரசார பணிகளில்ஈடுபட்டார். அவரது பிறந்த நாளை தெரிந்து வைத்திருந்த பிரதமர் நரேந்திர மோடி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதேபோல், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Posts