முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றிலேயே இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

மொத்தம் இரண்டே முக்கால் கோடி ரூபாய் பரிசுத்தொகைக்கான கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, இன்சியான் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் மட்டும் நடந்தன. 2 ஆவது நாளான இன்று நடைபெற்ற  மகளிர் ஒற்றையர் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், அமெரிக்காவைச் சேர்ந்த பீவென் ஜாங்கும் மோதினர். 21-7, 22-24, 15-21 என்ற செட் கணக்கில் சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

Related Posts