முதல் டி20 – அயர்லாந்து அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்தியா

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அயர்லாந்து : ஜூன்-28

டப்ளினில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களம் இறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 97 ரன்களும், தவான் 74 ரன்களும் விளாசினர்.

தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ஜேம்ஸ் சனான் மட்டும் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், சஹால் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Related Posts