முதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்

முதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

      சென்னை தியாகராய அங்கில் சர்வதேச முதியோர் தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு, முதியோர் இல்லங்களில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 2011ஆம் ஆண்டு 500 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை, தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும், இத்திட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைவதாகவும் தெரிவித்தார். மேலும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியோர்களுக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சுத்தமான உணவு வழங்கப்பட்டு வருவதாக கூறினார். தமிழகத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் ஒரே இடத்தில் வசிக்கும் 51 ஒருங்கிணைந்த வளாகம் உள்ளதாகவும், இதில் ஆயிரத்து 200 குழந்தைகள் மற்றும் ஆயிரத்து 200 முதியோர்கள் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

Related Posts