முதுகுளத்தூர் அருகே விவசாயிகள் கோரிக்கை

முதுகுளத்தூர் அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடக்கும் மின்கம்பியை அகற்ற மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதுகுளத்துார் – ராமநாதபுரம் செல்லும் சாலை காக்கூர் காமராஜபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களது பிரதான தொழில் விவசாயமாகும். பருவமழை மற்றும் கோடைமழை பொய்த்துவிட்டாலும் விவசாயிகள் நிலத்தை தரிசாக்க விடக்கூடாது என்பதற்காக போர்வெல் அமைத்து தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்தனர். காமராஜபுரம் கிராமத்தில் பம்புசெட் அறைகளுக்கு செல்லக்கூடிய மின்கம்பிகள் விவசாய நிலத்தில் அறுந்து கிடப்பதால், பணிகள்  மேற்கொள்ள முடியாமல்  விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளின் நலன் கருதி மின்கம்பியை உடனடியாக அகற்ற மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts