முதுகு வலி மிகவும் மோசமானால் ஓய்வு எடுத்துக் கொள்வேன்: எம்எஸ் டோனி 

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருபவர் எம்எஸ் டோனி. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு நீண்ட காலமாக முதுகு வலி இருந்து வரும் நிலையில்,  அந்த வலி தீவிரமடையாத வகையில் விளையாடி வருகிறார். ஐதராபாத்தில் சன்ரைசர்ஸ்க்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதுகு வலி காரணமாக டோனி களம் இறங்கவில்லை. இதனால் அவரது முதுகு வலி கடுமையாகி  விட்டதோ? என ரசிகர்கள் கவலையடைந்தனர். அதன்பிறகு பெங்களூரு அணிக்கெதிராக களம் இறங்கி 48 பந்தில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் பேட்டிங் செய்ய டோனி களம் இறங்கவில்லை.  இதுகுறித்து பேசிய டோனி,  ,முகுது வலி இருக்கத்தான் செய்கிறது எனவும், ஆனால், மிகவும் மோசமான நிலையில் இல்லை எனவும்,கூறினார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்தான் முக்கியம் என்பதால் காயம் அடைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும்,  முதுகு வலி மிகவும் மோசமானால்,  ஓய்வு எடுத்துக் கொள்வேன்’’ எனவும் டோனி தெரிவித்தார்.

Related Posts