முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மீண்டும் தாய் கட்சியில் இணைந்தார்.

Want create site? Find Free WordPress Themes and plugins.

டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மீண்டும் தாய் கட்சியில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுக-வில் இணைந்தார்.இந்த சந்திப்பின் போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உட்பட திமுக உயர்மட்ட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

இந்த இணைப்பிற்கு பிறகு, கரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த செந்தில்பாலாஜி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், ஜெயலலிதா மறைவுக்கு பின், டிடிவி தினகரன் அணிக்கு மாறினார்.

இதனைத்தொடர்ந்து, தகுதி நீக்கத்திற்கு ஆளான செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். அண்மைக்காலமாக, டிடிவி தினகரன் அணி மீது அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts