முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் தற்கொலை : முதல் கட்ட விசாரணையில் உறுதி

சென்னையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் வி.பி சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் வி.பி சந்திரசேகர், காஞ்சிவீரன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் இருந்தார்.மேலும் கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு சந்திரசேகர் இருந்த வீட்டின் அறையின் கதவு வெகு நேரம் திறக்காமல் இருப்பதை கண்டு அச்சமடைந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர்.அப்போது சந்திரசேகர் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார் சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

Related Posts