முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலை, அரசியல், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதுகளாக பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.

இந்நிலையில், குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மிராட்டி என்ற கிராமத்தில் கடந்த 1935-ஆம் ஆண்டில் பிறந்தவர் பிரணாப் முகர்ஜி. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிரணாப் முகர்ஜி, கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை  நாட்டின் 13-ஆவது  குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவிக்கிறார்.

Related Posts