முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

            முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 86ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தனது சுட்டுரை பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி,  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனவும், அவர்  நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டை கட்டியெழுப்ப காரணமாக இருந்தவர் மன்மோகன் சிங்  எனவும், அவர் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் எனவும் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

Related Posts