முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயபால் ரெட்டி ஐதராபாத்தில் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயபால் ரெட்டி ஐதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 77.  கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி,  ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ஜெயபால் ரெட்டி காலமானார்.   கடந்த 1942-ம் ஆண்டு பிறந்த இவர் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்தார், அதன் பின் அரசியலில் நுழைந்த அவர் 1970-ம் ஆண்டுநடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பின்னர். ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைஅமைச்சராகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவியையும் வகித்து வந்துள்ளார். மேலும் மன்மோகன் கிங் தலைமையிலான ஐ.மு.கூ.அரசில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் ஜெயபால் ரெட்டி இருந்துள்ளார். அவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்

முன்னாள் மத்திய அமைச்சரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சொல்லின் செல்வர்” என்று ஏற்றிப் போற்றி எல்லோராலும் பாராட்டப்பட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ஜெயபால் ரெட்டி திடீரென்று மறைவெய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும்,  மறக்க முடியாத அந்த மாமனிதரின் மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Related Posts