முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டியின் மறைவு இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பேரிழப்பு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாட்டின் தலைசிறந்த நாடாளுமன்ற மேதைகளில் ஒருவரான ஆந்திரத்தைச் சேர்ந்த  உயிர் நண்பர் ஜெயபால் ரெட்டி மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

, மாற்றுத் திறனாளியான ஜெயபால் ரெட்டி, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் எண்ணற்ற விவாதங்களில் எடுத்து வைத்த கருத்துகள் ஈடு இணையற்றவை என்றும்  ஆங்கிலத்தில் அற்புதமாக பேசும் வல்லமை உள்ளவர் என்றும் அவர்  கூறியுள்ளார். திருவாசகம் இசை ஒலி நாடா வெளியீட்டு விழாவுக்கு தனது அழைப்பின் பேரில் சென்னையில் வந்து பங்கேற்றுச் சிறப்பித்ததையும்ஹைதராபாத்துக்குச் சென்று அவரது இல்லத்தில் உள்ளவர்களுடைய அன்பைப் பெற்றதையும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.  ஜெயபால் ரெட்டி மறைந்த செய்தி கேட்டவுடன், அவரது மூத்த மகன் அரவிந்த் ரெட்டியோடு அலைபேசியில் பேசியதாகவும், அப்போது,  சாதாரண காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் . ஒரே நாளில் உயிர் நீத்தது பேரிடியாய் தங்கள் குடும்பத்தில் விழுந்துவிட்டதாக கூறினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 77 வயதான ஜெயபால் ரெட்டி,  மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, தன்னுடைய கலிங்கப்பட்டி கிராமத்தில் தேசிய கைப்பந்தாட்டப் போட்டியை நடத்தியதாகவும்,தன்னுடைய வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு தொலைக்காட்சிகளில் அந்தப் பந்தயத்தை ஒளிபரப்பச் செய்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அவருடன் பழகிய நாட்கள் மனதுக்கு மிகவும் ரம்மியமானவை; பசுமையானவை  என்றும்  அவரது மறைவு இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பேரிழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  . அவரது மறைவால் வாடும் துணைவியாருக்கும், அவரது இரண்டு புதல்வர்கள், புதல்விக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மதிமுக சார்பில் கண்ணீர் அஞ்சலியை மிகுந்த துக்கத்தோடு தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

Related Posts