முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சி மூத்த்த் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சி மூத்த்த் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலய வளாகத்தில் இருந்த அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.அவர்களுக்கு விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை சரியாக மாலை 5.18 மணிக்கு திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, அண்ணா சிலையும் திறந்த வைக்கப்பட்டது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆந்திரா முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மற்றும் ப சிதம்பரம், முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், குஷ்பு, தமாகா தலைவர் ஜிகே வாசன், நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, வடிவேல், விவேக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  சிலை திறப்பு விழா முடிந்ததும் சோனியாவும், ராகுலும் மெரினா கடற்கரை சென்றனர். அங்குள்ள அண்ணா சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல் அமைச்சர்நாராயணசாமி ஆகியோரும் மலரஞ்சலி செலுத்தினர்.அவர்களுடன் வந்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின்,பொருளாளர் துரைமுருகன், டி.ஆர். பாலு, கனிமொழி,  ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

Related Posts