முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்

பொங்கல் பண்டிக்கைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவுக்கு 8 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளதால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் ரயில்களில் முன்பதிவு செய்வதை எதிர்நோக்கியிருந்தனர். இந்நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி பயணத்துக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதுய. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரயில்களின் அனைத்து இடங்களும் நிரம்பின. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை விரைவு ரயில்களின் இடங்கள் சிறிது நேரத்தில் காலியானதால், பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். ஜனவரி 11 ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12 ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்குகின்றன.

Related Posts