முப்படைகளும் தயார் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

எத்தகைய சூழலையும் எதர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

வராஹா கப்பலை இந்திய கடலோர காவல்படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வராஹா கப்பலை இந்திய கடலோர காவல்படைக்கு அர்ப்பணித்து பேசிய ராஜ்நாத் சிங், புது மங்களுரு முதல் கன்னயாகுமரி வரையிலான கடற்பரப்பில் வராஹா கப்பல் கண்காணிப்பில் ஈடுபடும் என்றார். எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள முப்படைகளும் தயாராக இருப்பதாக அவர் கூறினார். துணை முதலைமச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் அகியோருடன் வராஹா கப்பலை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

Related Posts