மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி

மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

மும்பையில் உள்ள பிவாண்டி சாந்தி நகர் பகுதியில் நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் 4 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மேலும் நள்ளிரவு நேரம் என்பதால் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் மீட்பு படையினருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Posts