மும்பை அணியிடம் படுதோல்வி: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷாரூக்கான்

 

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பையிடம் 102 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததற்கு ஷாருக்கான் அந்த அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். 

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 108 ரன்னில் சரணடைந்தது.

நேற்றைய மோசமான தோல்வியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களின் ஒருவரான ஷாருக் கான்  ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து ஷாருக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விளையாட்டு என்பது ஸ்பிரிட் பற்றியது. வெற்றி தோல்வியால் அது பாதிக்காது. ஆனால் நேற்றைய தோல்விக்கு, அணியின் உரிமையாளராக உத்வேகத்தின் குறைபாட்டிற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

 

Related Posts