மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை பாகிஸ்தான் விடுதலை செய்தது ?

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் தொடங்கி, புல்வாமா தாக்குதல் வரை நடத்தி, பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியவன் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். இவன் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வந்த நிலையில், கடுமையான சர்வதேச அழுத்தங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அவனை கைது செய்தது. இந்த நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காக மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், பிற பயங்கரவாத இயக்கங்களும் வெளிப்படையாக தங்களின் செயல்பாடுகளை துவங்கியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லையோர பகுதிகளில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் வகுத்துள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன. இதனால் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts