மும்பை தாக்குதல் பற்றிய தகவல்கள் அளிப்பவர்களுக்கு 35 கோடி ரூபாய் பரிசு

மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் அளிப்பவர்களுக்கு 35 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் எனஅமெரிக்கா அறிவித்து உள்ளது.மீனவர்களைப் போல இரு படகுகளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், மும்பையின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரிந்து சென்று தாக்குதல் நடத்தினர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு வந்த தீவிரவாதிகள் கசாப், இஸ்மாயில் ஆகியோர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் அதே இடத்தில் 58 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். 104 பேர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அங்கிருந்து காமா மருத்துவமனை நோக்கி சென்ற தீவிரவாதிகளைத் தடுக்க முயன்ற, மும்பை காவல் அதிகாரிகளான ஹேமந்த் கார்கரே, அசோக் காம்தே, விஜய் சலாஸ்கர் ஆகியோரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். . மூன்று நாட்கள் நீடித்த இந்த தாக்குதல் 29-ம் தேதி முடிவுக்கு வந்தது. 166பேர் உயிரிழப்புக்கு காரணமான இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றாலும், தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக கஸாப் தெரிவித்தான். உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப்பை முன்வைத்து நீண்ட விசாரணை நடத்தப்பட்டது. அவன் மீது 29 பிப்ரவரி 2009 குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.  பின்னர் அவனுக்கு கடந்த 2012-ம் ஆண்டு  நவம்பர் 21 மரணதண்டனை விதிக்கப்பட்டது. மும்பை தாக்குதல் நடந்து இன்றுடன் 10 ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்நிலையில்  மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் அளிப்பவர்களுக்கு .35 கோடி ரூபாய் பரிசுவழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது

Related Posts