மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் அவ்வப்போது ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. சமீபத்தில் 2 நாட்களுக்கு முன் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மும்பையின் தீவு நகரமான கொலபாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஏற்கனவே மும்பையில் விடாது பெய்து வரும் மழையால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. கடந்த வாரம் 4 நாட்கள் வரை பாதிக்கப்பட்டிருந்த ரயில், விமானம் மற்றும் சாலை போக்குவரத்து, கடந்த 2 நாட்களாக சீரானது. தற்போது மீண்டும் கனமழை துவங்கி உள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related Posts