முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை எட்டியது

நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டமும் வேகமாக உயர தொடங்கி உள்ளது. 5 நாட்களுக்கு முன்பு 127 அடியாக இருந்த பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது 132அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 3ஆயிரத்த474 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 550 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து தற்போது 59புள்ளி58 அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் 60 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46புள்ளி50 அடியாக உள்ளது. வினாடிக்கு 37 கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.புள்ளி37 அடியாக உள்ளது. அணையிலருந்து 26 கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து வினாடிக்கு 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று காலை முதலே தேனி மாவட்டத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் மழைப்பொழிவு அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Related Posts