முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 152 அடியாக உயர்த்த வேண்டும்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தேனி : மே-12

தேனி மாவட்டம் கோம்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்திய பி.ஆர்.பாண்டியன், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 152 அடியாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Related Posts