மு.க.அழகிரியின் மகன் தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது 

தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான அழகிரி சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அழகிரியின் மகன்  தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பணமோசடி தடுப்பு சட்டம், 2002-ன் கீழ் ஒலிம்பஸ் கிரானைட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உரிய மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலம், கட்டிடங்கள் மற்றும் வைப்பு தொகைகள் என மொத்தம் .40 புள்ளி 34 கோடிரூபாய் மதிப்பிலான தயாநிதி அழகிரியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களான எஸ். நாகராஜன் மற்றும் தயாநிதி அழகிரி உள்ளிட்ட பிற குற்றவாளிகள், சட்டவிரோத முறையில் குத்தகை நிலத்தில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பலன் பெற்று, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts