மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

கனமழையாலும், பெரு வெள்ளத்தாலும், துயருற்று வரும் கேரள மக்களுக்கு உதவிடும் வகையில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதியன்று, கேரள மக்களுக்கு உதவிடுமாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்

அவரின் வேண்டுகோளை ஏற்று தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் அளித்த நிவாரணப் பொருட்கள் வாகனங்களில் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த செயற்கரிய உதவிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொட்ர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம் எனவும் சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் லாரிகளில் நிவரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts