மு.க ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் விக்கிரவாண்டியில் திமுக சார்பில் புகழேந்தியும், நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் ரூபன் மனோகரனும் போட்டியிட உள்ளனர். புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதியில் ஜான் குமாரும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் இந்த தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி வேட்பாளர் ஜான் குமாரும் உடனிருந்தார்.

 

 

Related Posts