மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் அனைத்து எம்பிக்களும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக இந்த கூட்டத்தின் தொடக்கத்தில், திமுக தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்திருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, அக்கட்சியின் எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்து அனைத்து திமுக எம்பிக்களும் தமிழகம் திரும்பி உள்ள நிலையில், இனி எம்பிக்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளை துவங்க வேண்டும், எம்பிக்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்கு சென்று மக்கள் சந்திப்பில் ஈடுபட வேண்டும் என்று கட்சியின் தலைமை சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஏற்கனவே இந்த கூட்டம் இரண்டு முறை அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது, நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts