மு.க. ஸ்டாலின், பேராசிரியர் க.அன்பழகனுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு

 

 

சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகச் செயல்தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின்பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.

தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா, வைகோ பொதுவாழ்வுப் பொன்விழா மூன்றையும் இணைத்து, முப்பெரும் விழா மாநில மாநாடாக 2018 செப்டெம்பர் 15 ஆம் நாளன்று, ஈரோட்டில் நடத்திடத் தீர்மானிக்கப்பட்டது.

வைகோ பொதுவாழ்வுப் பொன்விழா மலர் வடிவமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை, நேற்று 2018 ஜூலை 3 ஆம் நாள் அன்று,முன்னிரவு 8.30 மணி அளவில், அண்ணா அறிவாலயத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்தார்கள். முப்பெரும் விழா மாநாட்டில் பொன்விழா மலரை வெளியிடவும், முற்பகல் நிகழ்ச்சியில் நிறைவுரை ஆற்றவும் வேண்டுகோள் விடுத்ததை, மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தளபதி ஸ்டாலின் அவர்கள் ஒப்புதல் தந்துள்ளார்கள்.

பொன்விழா மலருக்குக் கட்டுரை வேண்டி, மலர்க்குழுத் தலைவர், கழகப் பொருளாளர் கணேசமூர்த்தி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள கடிதத்தையும், அப்போது அவரிடம் தந்தார்கள். கட்டுரை அனுப்பி வைப்பதாக செயல்தலைவர் கூறினார்.

இன்று, ஜூலை 4 ஆம் தேதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களைச் சந்தித்து, முப்பெரும் விழா மாநாடு குறித்தும், மாநாடு நடப்பதைக் கூறி, பொன்விழா மலருக்கான கட்டுரை வழங்குமாறு வைகோ வேண்டிக் கொண்டபோது, மகிழ்ச்சியோடு மாநாட்டுக்கு வாழ்த்துத் தெரிவித்த பேராசிரியர் அவர்கள், கட்டுரை தருவதாகவும் கூறினார். வைகோ நன்றி தெரிவித்தார்.

Related Posts