மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், வேலூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றியை உறுதிப்படுத்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அதனை சகித்துக்கொள்ள இயலாத ஆளும் அ.தி.மு.க., தனக்குள்ள ஆட்சி அதிகாரத்தை அதிகாரிகள் மூலம் தவறாக பயன்படுத்தி, வழக்குகளின் மூலம் அச்சுறுத்ததொடங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இஸ்லாமிய பெருமக்களை திருமண மண்டபத்தில் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசிய காரணத்திற்காக,மண்டபத்தை மூடி சீல் வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், தோல் தொழிற்சாலை உரிமையாளர் பரிதாபாபு, ஜமாத்நிர்வாகி ஜக்ரியா ஆகிய நால்வர் மீதும் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையும் முத்தரசன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிக வன்மையாக கண்டிப்பதாகவும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts