மூதாட்டியை தாக்கி செயினை பறிக்க முயன்ற வாலிபர் கைது

வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை தாக்கிவிட்டு செயினை பறிக்க முயற்சி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த  அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகரில்  வசந்தா என்ற மூதாட்டி நேற்றிரவு வீட்டில் தனியே இருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வாலிபா் மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று, அவா் அணிந்திருந்த தங்க செயினை அறுக்க முயன்றுள்ளார். மூதாட்டி எதிர்த்து போராடியதால், தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு அவர் தப்பி ஓடியுள்ளார். மூதாட்டியின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிட்லபாக்கம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், அரை மணி நேரத்துக்குள் அந்த வாலிபரை கைது செய்தனர். தலையில் பலத்த காயமடைந்த மூதாட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts