மூதாட்டி அடித்துக்கொலை: 3-வது நாளாக 10 கிராமங்கள் வெறிச்சோடின

திருவண்ணாமலை அருகே குழந்தை கடத்துபவர் என கருதி மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, 3-வது நாளாக 10 கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

திருவண்ணாமலை : மே-12

திருவண்ணாமலை மாவட்டம் கழியம் என்ற கிராமத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி என்கிற மூதாட்டி, கிராம மக்களால் காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கழியம் கிராமத்தில் வீடு வீடாக சோதனை நடத்தி வரும் காவல்துறையினர், பக்கத்து கிராமங்களிலும் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து கிராமவாசிகளில் பெரும்பாலானோர் ஊரை காலிசெய்துவிட்டு, தலைமறைவாக உள்ளனர். இதனால், இன்று 3-வது நாளாக 10 கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Related Posts