மூன்றாம் கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவு

மூன்றாவது கட்டத்தில், கேரளா, குஜராத், கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளனர். குஜராத் மாநிலம் காந்திநகரில் போட்டியிடும் பாஜக தலைவர் அமித் ஷா, அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி சோனல் ஷாவுடன் சென்று வாக்கினைப் பதிவு செய்தார். பாஜக மூத்த தலைவர் அத்வானி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி ஆகியோரும் அகமதாபாத்தில் வாக்களித்தார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் முதலமைச்சர் விஜய் ரூபானி தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கன்னூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று தனது  வாக்கினைப் பதிவு செய்தார். நடிகர் மம்முட்டி கொச்சியிலும், மோகன்லால் திருவனந்தபுரத்திலும் வாக்களித்தனர். தலையில் காயம்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், திருவனந்தபுரத்தில் வாக்களித்தார். உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரியில், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் சகோதரர் அபய் சிங் யாதவ் வாக்களித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அசாம் மாநிலம் திஸ்பூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார். மேற்குவங்க மாநிலம் முர்சிதாபாத்தில், வாக்குப்பதிவு மையம் ஒன்றில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், வாக்களிப்பதற்காக நின்றிருந்த ஒருவர் கொல்லப்பட்டார். டோம்கால் என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், அடையாளம் தெரியாத சிலர், பெட்ரோல் குண்டுகளை வீசியதில், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது. முன்றாவது கட்டத் தேர்தல் நடைபெற்ற 117 மக்களவைத் தொகுதிகளில் சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts