மூன்றாவது அணி: மம்தாவுக்கு மு.க ஸ்டாலின் ஆதரவு

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

 

தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக அல்லாத மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.  

சென்னை, ஏப்ரல்-25

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ளதையடுத்து பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அனைத்து மாநிலங்களிலும் தனது கூட்டணிகளை உறுதி செய்யும் பணிகளை தொடங்கிவிட்டனர். இந்த இரண்டு கட்சிகளின் மேல் கடும் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரமாக இறங்கியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி அண்மையில் எதிர்கட்சித் தலைவர்களுக்கு டெல்லியில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனாலும் சில மாநில கட்சிகள் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளன. இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்குப் பாராட்டு தெரிவித்து, ஆதரவும் அளித்தார். அதே போன்று அனைத்து மாநிலக் கட்சிகளிடமும் தொடர்ந்து 3வது அணி குறித்து பேசி வருகிறார்.  இந்நிலையில், மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு  ஆதரவு தெரிவித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்  ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தி.மு.க எப்போதும் பிராந்திய கட்சிகளின் ஒற்றுமைக்காகவும், வலிமையான கூட்டாட்சிக்காகவும் துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பது கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் என்றும் பா.ஜ.கவின் சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகளை இணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சியை ஆதரிப்பதாக அவர்  தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வரும் திமுக, 3வது அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts