மெக்ஸிகோவில் காவல்துறையின் 28 உயரதிகாரிகள் கைது

மெக்ஸிகோவில் மேயர் வேட்பாளர் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக காவல்துறையின் 28 உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெக்ஸிகோ : ஜூன்-26

மிச்சாவோகன் மாகாணத்தின் ஒகாம்பே நகர மேயர் தேர்தலில் போட்டியிட்ட பெர்ணாண்டோ ஏஞ்சலிஸ் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையைச் செய்த கும்பலுக்கும் நகரத்தின் பாதுகாப்புச் செயலாளர் ஆஸ்கர் கார்சியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்ய சிறப்புக் காவல் படையினர் முயன்றபோது, ஒகாம்பே நகர காவல்துறையினர் அதற்கு ஒத்துழைக்க மறுத்தனர். இதையடுத்து ஒகாம்பே நகர காவல்துறையைச் சேர்ந்த 28 உயரதிகாரிகளை சிறப்புப் படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Related Posts