மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்:மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடற்கரையில் நினைவிடங்கள் அமைப்பதற்கு எதிரான பொது நல வழக்கு வாபஸ் பெறப்பட்ட பிறகும் மெரீனாவில் கலைஞர் நினைவிடத்துக்கு இடம் தர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்ததாக குற்றம்சாட்டினார்.ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் எப்போதும் மக்களுக்காக உழைப்போம் என்ற ஸ்டாலின், தோல்வி அடையவேண்டும் என்பதற்காகவே தமிழிசைக்கு தூத்துக்குடி தொகுதி தேர்வு செய்யப்பட்டதா என்று  கேள்வி எழுப்பினார். கடற்கரையில் நினைவிடங்கள் அமைப்பதற்கு எதிரான பொது நல வழக்கு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து சட்டச் சிக்கல் நீங்கியதாகவும், ஆனாலும் கூட மெரினாவில் இடமே இல்லை என்று கூறி கலைஞருக்கு  இடம் ஒதுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்ததாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

Related Posts