மேகதாது அணை  தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது

மேகதாது அணை  தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம்நிராகரித்துள்ளது.

மேகதாது அணை தொடர்பான கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதே போன்று அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு நீதிமன்றத்தை அவமதிக்கிறது எனவும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் மனுவை இன்று அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றது.  அதன்படி இன்று வழக்கை விசாரித்தநீதிபதிகள், மேகதாது அணை திட்ட ஆய்வறிக்கை தயாரிக்க அளித்த அனுமதிக்கு தடையில்லை எனவும், மேகதாது அணை கட்டுவதற்கு முன் உச்சநீதிமன்ற அனுமதியை பெற வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம், மத்திய அரசும் 4 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

Related Posts