மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர்  பொய் பிரச்சாரம் செய்கிறார்: நாராயணசாமி

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,   புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் இதுவரை 90 சதவீத மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்துள்ளதாகவும், மக்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளதால் வெற்றி உறுதி எனவும்  கூறினார். இலவச அரிசி வழங்கிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை குறை சொல்ல என் ஆர் காங்கிரஸுக்கு எந்த தகுதியும் இல்லை என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நாராயணசாமி திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிரச்சாரத்திற்கு மக்கள் ஆர்வமுடன் திரண்டு வருகின்றனர் எனவும் தோல்வி பயம் காரணமாக மேகதாது விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும்  முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்

Related Posts