மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மேகதாது அணை மற்றும் காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார். இதற்கு முன்னதாக நாடாளுமன்ற தாக்குதலின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோன்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் இரும்பு ஆலை அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு ஆந்திர மக்களை ஏமாற்றி வருவதாக கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பிரதமர் மோடி தயாத்து விற்பவர் போல போலியான வாக்குறுதிகளை கூறுவதாக குற்றம் சாட்டிய அவர்கள், தாயத்து விற்பவர் போன்று வேடமணிந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Related Posts