மேட்டூர் அணைக்கான நீர்வரத்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் : மே-30

தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கோடை மழை தீவிரமடைந்ததால், காவிரி மற்றும் அதன் கிளை நதியான பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 5,060 கனஅடியில் இருந்து 5,429 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 36.72 அடியாகவும், அணையின் நீர்மட்டம் 10.46 டிஎம்சியாகவும் உள்ளது. மேலும், குடிநீருக்காக அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது.

Related Posts